நடிகர்கள், இயக்குனர்கள் சம்பளத்தைக் குறைத்தால் சினிமாவை காப்பாற்றலாம்… இயக்குனர் வெற்றிமாறன் கருத்து!

vinoth
புதன், 25 செப்டம்பர் 2024 (11:32 IST)
கொரோனா தொற்று காலத்தில் படங்களை நல்ல விலை கொடுத்து வாங்கின முன்னணி ஓடிடி நிறுவனங்கள். ஆனால் இப்போது முன்பு போல இல்லாமல் படங்களைத் தேர்ந்தெடுத்துதான் வாங்குகிறார்கள். அதுவும் முன்பு வாங்கியதை விட குறிப்பிட்ட சதவீதம் விலையைக் குறைத்துள்ளனர். ஓடிடிகளின் வரவால் சேட்டிலைட் பிஸ்னஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல முன்னணி நடிகர்களின் படங்களைக் கூட சேட்டிலைட் நிறுவனங்கள் வாங்குவதில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் ஒரு மிகப்பெரிய திறப்பாக கருதப்பட்ட ஓடிடி வியாபாரம் எனும் மாயப்பிம்பம் உடைந்துள்ளது. ஓடிடிகளின் வரவால் நடிகர்கள், இயக்குனர்கள் என முன்னணிக் கலைஞர்களின் சம்பளம் உயர்ந்தது. இப்போது அவர்கள் சம்பளத்தைக் குறைத்தால் சினிமா மீண்டெழும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் வெற்றிமாறன் “முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்றவர்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு குறைவான பட்ஜெட்டில் படமெடுத்தால் நாம் தியேட்டர் வருமானம் மூலமாகவே லாபத்தைப் பெறலாம். அப்படிதான் நாம் சினிமாவை மீட்டெடுக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்