பாபிசிம்ஹாவின் அடுத்த பட டைட்டிலை அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (20:05 IST)
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாபி சிம்ஹா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் 
 
நடிகர் பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்துக்கு ’வசந்த முல்லை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரமணன் புருஷோத்தமன் என்பவர் இயக்க உள்ளார். ராஜேஷ் முருகேசன் என்பவர் இசையமைக்க உள்ளார் 
 
இன்று பாபிசிம்ஹாவின் பிறந்த நாளை அடுத்த அவர் நடிக்கும் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது என்பதும் இதனை அடுத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பதும், மதுரா பிலிம்ஸ் ஃபேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்