“தமிழ் சினிமாவில் மூன்று வகையான இயக்குனர்கள் இருக்கிறார்… அதில் நான்…” – இயக்குனர் சுந்தர் சி பேச்சு!

vinoth

வியாழன், 17 ஏப்ரல் 2025 (14:59 IST)
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அரண்மனை 4 படமும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸான ‘மத கஜ ராஜா’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதையடுத்து சுந்தர் சி கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று அந்த படம் கிடப்பில் போட்டுவிட்டு வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் படத்தை முடித்துள்ளார்.  இந்த படத்தில் ரெஜினா, முனீஸ்காந்த், மைம் கோபி ஆகியோர் நடிக்க சத்யா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் ஏப்ரல் 24 ஆம் தேதி படம் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதில் வடிவேலு பழைய நகைச்சுவை மன்னனாக கம்பேக் கொடுப்பார் என டிரைலர் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் ஓடிடி வியாபாரம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சுந்தர் சி “தமிழ் சினிமாவில் மூன்று வகையான இயக்குனர்கள் உள்ளார்கள். முதல் தரப்பினர் தங்களுக்குப் பிடித்ததை எடுப்பார்கள். இரண்டாவது தரப்பினர் மக்களுக்குப் பிடித்ததை எடுப்பார்கள்.  மூன்றாம் தரப்பினர் ஹீரோக்களுக்குப் பிடித்ததை எடுப்பார்கள். நான் இதில் இரண்டாவது ரகம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்