இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரும் யுஏஇ-யில்தான் நடக்கும் போல் தெரிகிறது. அப்படி நடந்தால் 2022 ஐபிஎல் வரை தோனி ஆடியே ஆக வேண்டும். ஏனென்றால் தோனி போன்ற வீரர் ஆளில்லா மைதானத்தில் ஓய்வு பெறக் கூடாது. அவர் ரசிகர்கள் முன் ஒரு போட்டியாவது விளையாடி அதன் பின்னர்தான் ஓய்வு பெறவேண்டும் எனக் கூறியுள்ளார்.