பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கிக்கொண்ட வசந்தபாலனின் இரண்டு படங்கள்!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (15:23 IST)
இயக்குனர் வசந்தபாலன் அங்காடித் தெரு மற்றும் வெயில் போன்ற தரமான படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய அரவான், காவியத்தலைவன் மற்றும் ஜெயில் போன்ற திரைப்படங்கள் போதுமான வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் அநீதி என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். மேலும் இந்த படத்தை அவரே தயாரித்து வருகிறார். அந்த படமும் இன்னும் ரிலீஸாகவில்லை. இப்போது இயக்குனர் ஷங்கர் அந்த படத்தைக் கைபப்ற்றி ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதையடுத்து இப்போது நடிகர் பரத் நடிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். 2006 ஆம் ஆண்டு உருவான வெயில் திரைப்படத்துக்குப் பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் ஜீ5 தளத்துக்காக உருவாக உள்ளது. இந்த தொடரும் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்