முற்போக்கு சிவப்பு அழிந்துவிட்டது என்பேனா? – எஸ்.பி.ஜனநாதன் குறித்து வைரமுத்து ட்வீட்!

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (13:55 IST)
பிரபல தமிழ் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழில் இயற்கை, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இயக்குனராக மட்டுமல்லாமல் தீவிர இடதுசாரியாகவும் இருந்து வந்தவர் எஸ்.பி.ஜனநாதன்.

கடந்த வியாழக்கிழமை உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இழப்பு குறித்து ட்விட்டரில் கவிதை வெளியிட்டுள்ள கவிஞர் வைரமுத்து “இயக்குநர் ஜனநாதன் இறப்பு ஒரு கெட்டியான துக்கம். அவருக்கு நானெழுதிய ‘காதல் வந்தால் சொல்லியனுப்பு’ மறக்கவியலாது. செலுலாய்டு புத்தகத்தின் ஓர் இலக்கியப் பக்கம் கிழிந்துவிட்டது என்பேனா? வானவில்லில் முற்போக்குச் சிவப்பு அழிந்துபட்டது என்பேனா? வருந்துகிறேன்;இரங்குகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் பல திரை பிரபலங்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்