நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமுடியாது என அறிவித்ததற்குப் பின்னணியில் தெலுங்கு சினிமாவின் இரு முன்னணி நடிகர்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தான் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்து அதிர்வுகளை ஏற்படுத்தினார். பல தரப்பில் இருந்தும் இதற்கு ஆதரவாகவ குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் ரஜினியை வைத்து அரசியல் லாபம் பார்க்கலாம என நினைத்த சிலருக்கு இந்த முடிவு அதிர்ச்சியைதான் ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் அரசியல் உலகில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த முடிவுக்கு பின்னால் இருப்பவர்கள் என்று தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சிரஞ்சீவியும் மோகன் பாபுவும்தான் காரணம் என சொல்லப்படுகிறது.
அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் இருந்த ரஜினியை சந்தித்த இருவரும் அரசியல் வருகை குறித்து அறிவுரை சொன்னதாகவும் அதைக் கேட்ட பின்னரே ரஜினி இந்த முடிவை எடுத்ததாகவும் ஆந்திராவில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.