குந்தவையாக திரிஷா… வெளியானது அடுத்த பொன்னியின் செல்வன் போஸ்டர்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (12:48 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திர லுக் போஸ்டர்கள் வெளியாகிக் கொண்டு உள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று புனைவு படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில் நேற்று படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கதபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் படத்தில் குந்தவையாக நடிக்கும் திரிஷாவின் லுக்கை இப்போது படக்குழு வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்