தேசமில்லா இளவரசனின் பயணம்.. வந்தியத்தேவன் போஸ்டர் வைரல்!

செவ்வாய், 5 ஜூலை 2022 (13:26 IST)
மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள அரச காலத்து படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில் நேற்று விக்ரமின் ஆதித்த கரிகாலன் போஸ்டர் வெளியானது. தற்போது லைகா நிறுவனம் கார்த்தி நடிக்கும் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

The Prince without a kingdom, the spy, the swashbuckling adventurer...here comes Vanthiyathevan! #PS1

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்