பொன்னியின் செல்வன்: ஐஸ்வர்யா ராயின் ‘நந்தினி’ கேரக்டரின் போஸ்டர்

புதன், 6 ஜூலை 2022 (12:50 IST)
பொன்னியின் செல்வன்: ஐஸ்வர்யா ராயின் ‘நந்தினி’ கேரக்டரின் போஸ்டர்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. 
 
இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக ஆதித்ய கரிகாலன், ராஜராஜ சோழன் மற்றும் வந்தியதேவன் ஆகிய கேரக்டர்களின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
 
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கேரக்டர்களில் ஒன்றான நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடித்து வந்த நிலையில் தற்போது அந்த கேரக்டரின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
 
நந்தினி கேரக்டரில் அட்டகாசமாக இருக்கும் ஐஸ்வர்யாராயின் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்