ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தேவையில்லாத வதந்தியை பரப்புகிறது – திருப்பூர் சுப்ரமண்யம் ஆதங்கம்!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (16:59 IST)
காட்டேரி பட ரிலீஸ் தாமதம் தொடர்பாக ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டுள்ள தகவல் வருத்தமளிப்பதாக உள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.

நடிகர் வைபவ், ஆத்மிகா, ஆகியோர் நடிப்பில் இயக்குநர் தீகை இயக்கத்தில் உருவாகியுள்ள படம், காட்டேரி. வரும் 25 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் ‘கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருவதால் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவிருந்த காட்டேரி படம் தற்காலிகமாக தள்ளி வைக்கிறோம்’ என கூறியிருந்தது.

இந்நிலையில் இந்த அறிக்கைக்கு எதிராக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமண்யம் வெளியிட்டுள்ள ஆடியோவில் ‘அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருத்தமளிக்கும் விதமாக உள்ளது. அவர்களின் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருப்பது அவர்களின் உரிமை. ஆனால் அதற்காக கொரோனா இரனடாவது அலை என உண்மையில்லாத செய்தியைப் பரப்புவது வருத்தமளிக்கிறது. மத்திய அரசு இப்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வாய்ப்பில்லை என சொல்லியுள்ளது. நேற்று வெளியான வொண்டர் வுமன் திரைப்படத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அப்படியிருக்கும்போது கரோனா மீது பழியைப் போட்டு மக்களைப் பயமுறுத்துவது உண்மையில் வருத்தமளிக்கிறது. இப்போதுதான் மக்கள் திரையரங்குகளுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்