துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் அப்டேட்டை வெளியிட்ட ஜிப்ரான்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (15:14 IST)
துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய இரு பாடல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே சில்லா சில்லா என்ற பாடல் ரிலீஸானது. இந்த படத்தில் இடம்பெற்ற  அடுத்த பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடல் நேற்று முன்னர் வெளியாகியுள்ளது.

வைசாக், மஞ்சுவாரியர் மற்றும் ஜிப்ரான் ஆகியோர் பாடிய இந்த பாடலை ஜிப்ரான் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் இந்த பாடலை வைசாக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இந்நிலையில் மூன்றாவது பாடல் கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த பாடலைப் பற்றி குறிப்பிட்டுள்ள ஜிப்ரான் #gangsta என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்