விஜய்யை அடுத்து ரஜினிக்கு கொக்கி போடும் தில் ராஜு!

செவ்வாய், 20 டிசம்பர் 2022 (14:51 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான தில் ராஜு இப்போது விஜய்யை வைத்து வாரிசு என்ற படத்தை தயாரித்துள்ளார்.

விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறார் தயாரிப்பாளர் தில் ராஜு. தெலங்கானா மற்றும் ஆந்திராவில் மிக முக்கிய தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு அடுத்து தமிழ் சினிமாவிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் விஜய்யைத் தொடர்ந்து அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கால்ஷீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்