சின்ன பட்ஜெட் படங்களை வாழ விட மாட்டார்கள்? – இயக்குனர் சீனு ராமசாமி ஆதங்கம்!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (15:35 IST)
சமீப காலமாக சிறிய பட்ஜெட் படங்கள் அழியும் நிலையில் தமிழ் சினிமாவில் இருந்து வருவதாக பலரும் பேசி வரும் நிலையில் இயக்குனர் சீனு ராமசாமியும் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.



சமீப காலமாக தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் படங்கள் நல்ல வசூலையும், புகழையும் பெற்று வரும் அதே சமயம் சிறிய பட்ஜெட் படங்களின் நிலையில் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. சிறிய பட்ஜெட் படங்கள் என்றாலே திரையரங்குகள் ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடுவதாக சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சின்ன பட்ஜெட் படங்களை நினைத்து இனி தமிழ் சினிமாவிற்குள் நுழைய முடியாது என்று நடிகர் விஷால் சமீபத்தில் பேசியிருந்தார். நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட்டும் இதுகுறித்து ஆதங்கமாக பேசியிருந்தார்.

இந்நிலையில் சின்ன பட்ஜெட் பட நிலை குறித்து பதிவிட்டுள்ள இயக்குனர் சீனு ராமசாமி “நடிகர் விஷால் சொல்லுவது உண்மை சிறு படங்களுக்கு இங்கே நியாயம் இல்லை சிறுபாடங்களை வெளியிட யார் உண்டு முதல் மூன்று நாள் அவகாசம் தான் சிறுபடங்களுக்கு தியேட்டரில் முதல் ஷோ கூட்டமில்லை எனில் தூக்கப்படும் தியேட்டர் வியாபாரம் பெரிய படங்களுக்கு சாதகமாக வைத்து கொண்டு அதில் சிறிய படங்களை வெளியிடுவது படுகொலைக்கு சமம். பல தியேட்டரில் இங்கு சைக்கிள் பார்க்கிங்கே இல்லை அப்புறம் சின்ன படத்தை யார் வாழ விடுவார்கள்.?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்