தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவை சந்தித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி. இவர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு தளங்களை பார்வையிட வந்த இயக்குனர் சீனு ராமசாமி மரியாதை நிமித்தமாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அவர்களை நேரில் சந்தித்து தான் எழுதிய 'புகார் பெட்டியின் மீது படுத்து உறங்கும் பூனை'என்னும் கவிதை நூலை நினைவு பரிசாக வழங்கி பல சீர்மிகு பணிகளால் தேனி மாவட்ட மக்களின் அன்பை பெற்ற பெண் கலெக்டரை வாழ்த்தினார்.இதுகுறித்த புகைப்படம் பரவலாகி வருகிறது.