எளிமையாக பிறந்தநாளை கொண்டாடிய சூப்பர் ஸ்டார்

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (22:27 IST)
பிறந்தநாளை எளிமையான முறையில் கொண்டாடி இருக்கிறார் மோகன்லால். இவருக்கு சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
 

மலையாள சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளால நம்பர் 1 நடிகராகவும், வசூல் சக்கரவர்தியாகவும் இருப்பவர் சூப்பர் ஸ்டார் மோகன்லால். மலையாள சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரகவும் அதிக விருதுகள் பெற்ற நடிகராகவும் அறியப்படுகிறார்.

இந்நிலையில், இவரது 61 வது பிறந்த்நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகர்கள் மோகன்லால், காமன் டிபியை வெளியிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் தனது பிறந்தநாளை எளிமையான முறையில் கொண்டாடி இருக்கிறார் மோகன்லால்.

மோகன்லால் நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி திரைப்படம் ’மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ (Marakkar Arabikadalinte Simham) இந்த திரைப்படம் வரும் மே மாதம் 13ஆம் தேதி ரம்ஜான் திருநாளின் போது ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வந்தது என்பதும் புரமோஷன் பணிகள் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் இந்த படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஓணம் திருநாளின் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் வேலையில் அரசு விதித்துள்ள கொரொனா விதிமுறைகளின்படி நடந்து வருகிறது.

இந்நிலையில், தனது 61 வது பிறந்தநாளை  தனது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் இணைந்து கொண்டாடி உள்ளார் மோகன் லால்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்