பிரபாஸின் பிறந்தநாளுக்கு' சலார் 'படக்குழு சர்ப்பிரைஸ்...

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (15:44 IST)
பிரபாஸ் நடிக்கும் அடுத்த பான் இந்திய திரைப்படம் சலார். உலகம் முழுவதும்  எதிர்பார்ப்பு  எழுந்துள்ள  இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

இந்த படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வி எஃப் எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்போது டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்தது.

சமீபத்தில், இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல கவனம் பெற்ற நிலையில் பிரபாஸின் பிறந்தநாளான அக்டோபர்  23 ஆம் தேதி சலார் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.

இந்த நிலையில்,  இன்று  நடிகர் பிரபாஸின் பிறந்த நாளையொட்டி சலார் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு, பிரபாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளதுடன், இப்படம் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகும் என உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்