ரஜினி படத்தில் இணைந்த பாகுபலி நடிகர்

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (13:18 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்  நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர். இப்படம் வசூல் சாதனை படைத்தது.

இதையடுத்து,  நடிகர் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கும் ’’ தலைவர் 170’’ என்ற  படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த  நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து  துஷாரா விஜயன், ரித்திகா சிங்கும் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பாகுபலி பட நடிகர் ராணா டகுபதி ‘தலைவர் 170’ படத்தில் இணைந்துள்ளார். இதை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Welcoming the dapper & supercool talent

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்