செப்டம்பர் 22ஆம் தேதி ஒரே நாளில் 2 விஜய் படங்கள் ரிலீஸ்

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (00:56 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவரை பற்றிய இரண்டு படங்கள் ஒரே நாளில் அதாவது வரும் 22ஆம் தேதி வெளியாகின்றது.



 
 
விஜய் ரசிகர்கள் தயாரித்து நடித்து இயக்கி வரும் படம் '3 ரசிகர்கள்'. அதேபோல் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் எடுத்து வந்த திரைப்படம் 'போக்கிரி சைமன்'. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் வரும் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
 
ஒரு நடிகர் குறித்து இரண்டு வெவ்வேறு மொழிகளில் திரைப்படம் தயாரிக்கப்பட்டு அந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்