மீண்டும் இசையமைப்பாளராக பணியாற்றும் டி ராஜேந்தர்!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (14:22 IST)
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பலதுறைகளில் செயல்பட்டவர் டி ராஜேந்தர். அவரின் படங்கள் 80 களில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை செலுத்தின. அதன் பின்னர் அவர் அறிமுகப்படுத்திய அவரின் மகன் சிம்பு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

சில ஆண்டுகளாக சினிமாவில் இடைவெளி விட்டிருந்த டி ஆர் இப்போது மீண்டும் ஒரு படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். கடைசிவரை நான் தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனராக எம் ஏ ராஜேந்திரன் இயக்குகிறார்.

இந்த படத்தின் தலைப்புக்காகவே இசையமைக்க ஒத்துக் கொண்டதாக டி ராஜேந்தர் படத்தின் பூஜை நிகழ்வில் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்