எல்லா நடிகர்களுக்கும் அவர் ஒரு உத்வேகம்… ஷாருக் கான் புகழ்ச்சி!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (14:15 IST)
ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் ரிலீஸை ஒட்டி தற்போது ப்ரமோஷன் வேலைகளில் ஷாருக் கான் ஈடுபட்டு வருகிறார். அதையொட்டி X தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

அதில் கமல்ஹாசன் பற்றி பதிவிட்டுள்ள ஷாருக் கான் ”கமல்ஹாசன் மிகவும் அன்பானவர். எல்லா நடிகர்களுக்கும் அவர் ஒரு உத்வேகம்.” எனக் கூறியுள்ளார். கமல்ஹாசனோடு இணைந்து ஷாருக் கான் ஹேராம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்