கொரோனா காலத்தில் சூர்யா செல்லும் ஆன்லைன் கிளாஸ் – வெளியான புகைப்படம்!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (17:46 IST)
நடிகர் சூர்யா கொரோனா காலத்திலும் ஆன்லைன் மூலமாக தனது டிரையனரிடம் இருந்து ஆலோசனைகள் பெற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா காரணமாக மக்களின் அனைத்து அன்றாட செயல்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டன. ஆனாலும் வீட்டுக்குள்ளாகவே எல்லாவற்றையும் செய்ய முடியாத சூழல் உள்ளது. அப்படியான ஒன்று ஜிம்முக்கு செல்வது. கொரோனா காரணமாக ஜிம்முக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நடிகர் சூர்யாவின் ஜிம் டிரைனர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் ஆன்லைன் மூலமாக டிப்ஸ்களைப் பெற்று சூர்யா வீட்டில் இருந்தே உடல்பயிற்சிகளை மேற்கொள்கிறாராம். அது விருப்பமான ஒன்று இல்லை என்றாலும் சூழல் காரணமாக இதைத் தவிர வேறு வழியில்லை என ட்ரைனர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில் சூர்யா முக்கியமானவர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்