இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படம் ரிலீஸ் ஆகாத நிலையில் அவருடைய அடுத்த படம் எது என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த நிலையில் பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த ஒரு திரைப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. பாலாவின் பி ஸ்டுடியோ ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களை தயாரித்த நிலையில் தற்போது ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் மலையாள படமான ஜோசப்பின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.