20 வருடத்துக்கு முன்பு ரஜினி சார் சொன்ன அட்வைஸைப் பின்பற்றுகிறேன்.. சூர்யா பகிர்ந்த தகவல்!

vinoth
புதன், 23 அக்டோபர் 2024 (07:42 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் நவம்பர் 14 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா படம் ரிலீஸாகி இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால் கங்குவா படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த படத்தை வட இந்தியாவில் அதிக திரைகளில் ரிலீஸ் செய்கிறார்கள். அதனால் சூர்யா மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் முகாமிட்டு பிரமோஷன் செய்து வருகிறார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் “நான் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றாக ரஜினி சாருடன் விமானத்தில் சென்றேன். அப்போது அவர் என்னிடம் ‘நீங்கள் வெறும் ஸ்டார் மட்டும் இல்லை. நல்ல நடிகர். அதனால் கதையம்சம் உள்ள படங்களிலும் நடியுங்கள் என்றார். அதனால்தான் நான் சிங்கம் போன்ற படங்களிலும் நடிக்கிறேன். ஜெய்பீம் போன்ற படங்களிலும் நடிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்