சூர்யா சுதா கொங்கரா படத்துக்கு நீண்ட ப்ரேக்… காரணம் இதுதான்!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (11:05 IST)
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில்  விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் மாதவன் உள்ளிட்டவர்களும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது கங்குவா படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வரும் நிலையில் இந்த மாதத்தோடு முடியவுள்ள நிலையில், நவம்பர் மாதத்தில் சூர்யா சுதா கொங்கரா படம் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நவம்பர் மாதத்தில் தொடங்கினாலும், இந்த படத்தின் ஷூட்டிங் அதன் பின்னர் சில மாதங்கள் கழித்துதான் மீண்டும் தொடங்க உள்ளதாம். காரணம் இடையில் சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தி சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் வேலைகளில் கவனம் செலுத்த உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்