ஏ.ஆ.ரஹ்மான் இசையில் நடிகர் வடிவேலு பாடியுள்ள மாமன்னன் பட முதல் சிங்கில் நேற்று ரிலீஸானது. இப்பாடலை நடிகர் சூரி பாராட்டியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முழுவதும் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரடெக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் மாமன்னன் பட முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. அந்த போஸ்டரில் வடிவேலுவின் லுக் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், நேற்று மாமன்னன் பட முதல் சிங்கில் ராசாகண்ணு என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ள இப்பாடல் இணையதளத்தில் வைரலானது. பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை சினிமா கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
இப்பாடல் பற்றி நடிகர் சூரி தன் டுவிட்டர் பக்கத்தில், தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல் #RaasaKannu - #MAAMANNAN படக்குழுவினர் க்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இப்பாடல் இதுவரை 33 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்துள்ளது.