கீர்த்தி சுரேஷிற்கு உதவிய சூப்பர் ஸ்டார்,…

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (17:17 IST)
கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்துவரும் ராங் தி படத்தின் #NaaKanuluYepudu என்ற அடுத்த சிங்கில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது செல்வராகவனுடன் சானிக் காயிதம் மற்றும் தெலுங்கில் நிதினுடன் ராங் தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர்  நிதின். இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் ராங் தி. இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தை இயக்குநர் வெங்கி அள்ளுரி இயக்கியுள்ளார்.

நிதினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ராங்கே டே படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் சிறந்த முறையில் பாடல்களை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தின் இடம்பெற்றுள்ள ஒரு படலை கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளருடன் இணைந்து பாடியிருந்தார்.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராங் தி படத்தின் பஸ்டே பாடலை இன்று படக்குழு வெளியிட்டனர். பஸ்டே என்ற பாடல் சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், #NaaKanuluYepudu என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை நாளை இன்று 4;05 மணிக்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வெளியிடவுள்ளார் எனப் படக்குழு தெரிவித்தது.

அதன்படி, ராங் தி படத்தின் #NaaKanuluYepudu என்ற அடுத்த சிங்கில் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

#NaaKanuluYepudu என்ற பாடலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்பாடலை சித்ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இளைஞர்களுக்குப் பிடித்துள்ள இப்பாடம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்