பிசிசிஐக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார்

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (15:43 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர். இப்படம்  தமிழக அளவில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இதையடுத்து, லோகேஷுடன் இணைந்து அடுத்த படத்தில் பணியாற்றவுள்ளார். இந்த  நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த  போட்டிக்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தயாராகி வருகின்றன.

சமீபத்தில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு  கோல்டன் டிக்கெட் வழங்கினார். இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது.

கிரிக்கெட்டின் மீது ஆர்வம் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் மைதானத்திற்குச் சென்று சில போட்டிகளை கண்டுகளித்த நிலையில்,  கோல்டன் டிக்கெட் கிடைத்துள்ளதால் ரஜினி உலகக் கோப்பை போட்டியை காண்பார் என  தெரிகிறது.

இந்த நிலையில், தனக்கு ''கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ அமைப்பிற்கு'' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி கூறியுள்ளார்.

மேலும்,  ''ஜெய்ஷா (அமித்ஷாவின் மகன்) உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி உங்களுக்கு  நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்