உலகக்கோப்பை கிரிக்கெட்: நடிகர் ரஜினிகாந்த்திற்கு கோல்டன் டிக்கெட்

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (13:39 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.  
 
கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த  போட்டிக்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தயாராகி வருகின்றன. 
 
இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, பிரபல விஐபிகளுக்கு கோல்டன் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறார். ஏற்கனவே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சச்சின் தெண்டுல்கர் உட்பட ஒரு சிலருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் ஜெய்ஷா, கோல்டன் டிக்கெட் வழங்கியுள்ளார் 
 
இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரஜினிக்கு கோல்டன் டிக்கெட் கிடைத்துள்ளதை அடுத்து அவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்