உலகக்கோப்பை கிரிக்கெட்: அமிதாப்பச்சனுக்கு பிசிசிஐ கொடுத்த கோல்டன் டிக்கெட்..!

புதன், 6 செப்டம்பர் 2023 (13:03 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண நடிகர் அமிதாப்பச்சனுக்கு கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ வழங்கி கௌரவத்துள்ளது. 
 
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேலும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 
 
இந்த நிலையில்  தலைசிறந்து விளங்கும் நபர்களுக்கு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க கோல்டன் டிக்கெட் வழங்கும் நடைமுறையை கடந்த சில ஆண்டுகளாக பிசிசிஐ கடைப்பிடித்து வருகிறது.
 
 அந்த வகையில் உலக கோப்பை போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்