அக்தர் பந்தில் சச்சின் சிக்ஸ் அடித்த போது… விராட் கோலி பகிர்ந்த நாஸ்டால்ஜிக் தருணம்!

வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:36 IST)
கிரிக்கெட் உலகில் பரம் வைரிகளாக பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அதிகளவு ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. அதனால் இவ்விரு அணிகளும் மோதும் எப்போதும் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருப்பதில்லை.

அது போல ஒரு போட்டிதான் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி. பாகிஸ்தான் நிர்ணயித்த 270 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் ஆடிய சிறப்பான இன்னிங்ஸ் இன்றளவும் நினைவு கூரப்படும் ஒரு இன்னிங்ஸ்.

இந்த போட்டி பற்றி தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துள்ளார் இந்திய அண்யின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அதில் “சிறுவனாக அந்த போட்டியை பார்த்தேன். அந்த போட்டியில் சோயிப் அக்தர் பந்தில் சச்சின் சிக்ஸ் அடித்த போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்