அப்பாவை இழந்த சிறுவனுக்கு சூப்பர் ஸ்டார் உதவி !

Webdunia
வியாழன், 6 மே 2021 (18:31 IST)
கொரோனாவால் அப்பாவை இழந்த சிறுவனுக்கு சூப்பர் ஸ்டார் உதவி  செய்துள்ளார்.

வீர், வாண்டட்,   சுல்தான், டைகர் போன்ற படங்களில் நடித்துள்ளவர் பாலிவுட் நடிகர் சல்மான். இவரது பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்துள்ளதால் இவர் பாலிவு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

இந்நிலையில், கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்

இந்நிலையில், மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு தந்தையை இழந்த 18 சிறுவன் மும்பையைச் சேர்ந்த சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் பிரிவு தலைவருக்கு டுவிட்டரில் உதவி வேண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர், இதை சூப்பர் ஸ்டார் சல்மான்கான்னின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இந்நிலையில் சிறுவனின் கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்ய உதவி செய்வதாக சல்மான் உறுதி அளித்துள்ளார்.

இதனால் சல்மானின் மனிதநேயத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.  மேலும் கடந்த மார்ச் மாதம் முதல் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு கொரொனா காலத்தில் உணவுபொருட்கள் கொடுத்து சல்மான் உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்