பாகுபலி பட இயக்குநரின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ !

Webdunia
வியாழன், 6 மே 2021 (18:24 IST)
ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் கொரொனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி என்பது தெரிந்ததே. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ’ஆர்.ஆர்.ஆர்’என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார் என்பதும் இந்தப் படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தில் அஜய் தேவ்கான், ஆலியா பட் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

 
இந்த நிலையில் திரைப்படம் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் படக்குழுவினர் அறிவித்தனர்.

ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்றால் பெரும்பாலான மாநிலங்களில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ளது. குறிப்பாக திரைப்பட ஷூட்டிங்குகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு அனுமதியில்லை. அதனால் முன்னணி நடிகளின் படங்களும் ஒடிடியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர். படம் கொரொனா இரண்டாம் அலை பரவலால் தீபாவளி அன்று வெளியாகாது எனவும் அடுத்தாண்டு 2022 – மகரசங்கிராந்தி அன்று உலகமெங்கும் வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரொனா தொற்றுக்கு எதிராக ஒன்றாக இணைந்து நிற்போம் எனத் தெரிவிக்கும் வகையில், ஆர்.ஆர்.படக்குழுவினர்  கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SS Rajamouli (@ssrajamouli)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்