ராம்சரண் தேஜா - உபாசனா தம்பதிக்கு சூப்பர் ஸ்டார், அல்லு அர்ஜூன் வாழ்த்து

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (21:15 IST)
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான ராம்சரண் தேஜா மனைவி உபாசனாவிற்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது. இதற்கு, சூப்பர் ஸ்டார் மற்றும் அல்லு அர்ஜூன் வாழ்த்துகள் கூறியுள்ளனர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர் மஹதீரா, ஆர்.ஆர்.ஆர்  உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ராம்சரண் தேஜாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவிற்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருமணம் ஆகி 11 வருடங்கள் கழித்து ராம் சரண்யா உபாசனா தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. உபாசனின் தாத்தாவின் அப்பல்லோ மருத்துவமனையில் குழந்தை பிறந்திருப்பதாகவும் குழந்தை மற்றும் தாய் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில்,  தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  ராம்சரணுக்கும், உபாசனாவுக்கும் பெரிய வாழ்த்துகள்…. உங்கள் குடும்பத்திற்கு புதிய வருகைக்காகவும்,  நீங்கள் இருவரும் பெற்றோர் ஆனதற்காகவும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜூன் தன் டுவிட்டர் பக்கத்தில், விலைமதிப்பற்ற புதிய வருகைக்கு இனிய தங்க இதயம் கொண்ட என் சகோதரன் ராம்சரணுக்கும், அன்பான பெண் உபாசானாவுக்கும் வாழ்த்துகள்…. என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்