இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர் ராஜமெளலி. இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்களைத் தொடர்ந்து வெளியான ஆ.ஆர்.ஆர் படம் உலகளவில் ஹிட் அடித்து, வசூலிலும் சாதனை படைத்தது.
இப்படத்தை அடுத்து, சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து, ராஜமெளலில் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், விரைவில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படப்பணிகள் முடிந்து, இப்படத்தில் மகேஷ்பாபு இணைந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இணையவுள்ளதாகவும், பாலிவுட் நடிகர் அமீர்கான் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.