திரையரங்கில் ஹவுஸ்புல் ஆக ஓடும் "மாமன்னன்" படத்துக்கு கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

திங்கள், 3 ஜூலை 2023 (15:35 IST)
உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
இப்படத்திற்கு  ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியாகி வெற்றிப்படமாக வசூல் குவித்து வரும் இந்திரைப்படம் முதல் நாளில் மட்டும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 6 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், இரண்டாம் நாளில் 5 கோடி ரூபாயை வசூலித்தது தற்போது வரை ரூ. 17 கோடி வசூலித்திருப்பது குறிப்பிடதக்கது. 
 
இந்நிலையில் இந்த சூப்பர் ஹிட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் இப்படத்திற்காக ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல்கள் கூறுகிறது. ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்