''#மாமன்னன் படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வெற்றி'' - உதயநிதி டுவீட்

செவ்வாய், 4 ஜூலை 2023 (22:11 IST)
மாமன்னன் படத்தின் வெற்றியையொட்டி, திரையரங்கு உரிமையாளர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளனர்.

உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இத்திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகும் முன்பு பல சர்ச்சைகள் இருந்த நிலையில்,   நேற்று முன் தினம் ரிலீஸ்  ஆன மாமன்னன் படம்  நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சியடைந்து, இன்று இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடினர். இப்படத்தை முதல்வர் முக.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் பராட்டியிருந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தை வெற்றியையொட்டி, திரையரங்கு உரிமையாளர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளனர்

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது: .

‘’#மாமன்னன் திரைப்படம், கருத்தியல் ரீதியாக மட்டுமன்றி, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வெற்றி பெற்றுள்ளதை முன்னிட்டு, அம்பத்தூர் ராக்கி சினிமாஸ், காஞ்சிபுரம் பாபு சினிமாஸ், சிதம்பரம் லேனா டாக்கீஸ் உள்ளிட்ட திரையரங்குகளின் உரிமையாளர்கள், இன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்தினர். அவர்களுக்கு என் அன்பும், நன்றியும் ‘’என்று தெரிவித்துள்ளார்.

#மாமன்னன் திரைப்படம், கருத்தியல் ரீதியாக மட்டுமன்றி, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வெற்றி பெற்றுள்ளதை முன்னிட்டு, அம்பத்தூர் ராக்கி சினிமாஸ், காஞ்சிபுரம் பாபு சினிமாஸ், சிதம்பரம் லேனா டாக்கீஸ் உள்ளிட்ட திரையரங்குகளின் உரிமையாளர்கள், இன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.… pic.twitter.com/bnE8d3jPJp

— Udhay (@Udhaystalin) July 4, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்