சுந்தர் சி யின் கலகலப்பு 3 படத்தில் கவின் நடிக்காதது ஏன்? வெளியான தகவல்!

vinoth
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (11:55 IST)
சுந்தர் சி இயக்கத்தில் உருவான கலகலப்பு திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் கலகலப்பு இரண்டாம் பாகத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்தார். ஆனால் அந்த படம் முதல் பாகம் போல வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அரண்மனை 4 எடுத்து வரும் அவர் விரைவில் கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்த படத்தில் கவின் நாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்து வரும் நிலையில் இந்த செய்தியை சுந்தர் சி தரப்பு மறுத்தது.

ஆனால் இந்த படத்துக்காக கவினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது உண்மைதானாம். ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்க 6 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டதால் சுந்தர் சி ‘வேறு ஹீரோ பார்த்துக் கொள்ளலாம்’ எனக் கிளம்பி விட்டதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்