விருமன் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் முத்தையா ஆர்யாவை கதாநாயகனாக்கி இந்த படத்தை இயக்க, ஜி ஸ்டுடியோஸ் பைனான்ஸில் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் இப்போது முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக பிரிகிடா சகா மற்றும் தர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். முத்தையாவின் மற்ற படங்களைப் போலவே மதுரையைக் கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது