காத்திருந்து காத்திருந்து 2 தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய தொலைக்காட்சி… பின்னனி என்ன?

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (15:42 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்க ஆரம்பிக்கப்பட்ட படம் மன்னவன் வந்தானடி மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. காதல் படமாக தயாரான இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவில் நடந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனைக் காரணமாக பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.  5 ஆண்டுகளுக்கும் மேலாகியும் மீண்டும் இந்த படம் தொடங்கப்படுவதற்கான ஆயத்தங்கள் எதுவும் தெரியவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமைக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்த சன் தொலைக்காட்சி நிறுவனம் இப்போது தங்களிடம் இருந்து பெற்ற அட்வான்ஸ் தொகையை திரும்ப கொடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுபோல தாமதமாகிக் கொண்டே இருக்கும் பார்ட்டி படத்தின் தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்