நானே வருவேன் திரைப்படத்துக்குக் குறையும் காட்சிகள்!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (15:36 IST)
நானே வருவேன் திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளார். தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்துக்காக எந்த ப்ரமோஷனும் செய்யாமல் ரிலீஸ் செய்தனர். அதனால் ரசிகர்களும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று படத்தைப் பார்த்தனர். முதல் நாளில் நல்ல வசூல் பெற்ற நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் ரிலீஸூக்குப் பிறகு நேற்றிலிருந்து நானே வருவேன் படத்துக்கு பெரும்பாலான திரையரங்குகள் காட்சிகளைக் குறைக்க ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்