சூரரைப் போற்று இந்தி ரீமேக் ரிலீஸ் தள்ளிவைப்பு… பின்னணி என்ன?

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (07:32 IST)
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சில மாதங்கள் தடைபட்டது. இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிட்டத்தட்ட 5 மாதங்கள் தள்ளிவைக்கப்பட்டதற்குக் காரணம், இடையில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள வேறு சில படங்களின் ரிலீஸ்கள் திட்டமிடப்பட்டுள்ளதுதான் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்