சுதா கொங்கரா கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனக் கூட்டணி…. ஹீரோ யார்? தற்போதைய நிலை இதுதான்!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (09:33 IST)
சுதா கொங்கரா மற்றும் கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனம் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய Hombale Films என்ற நிறுவனம் சுதா கொங்காரே இயக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இந்த அறிவிப்போடு வெளியாகவில்லை.

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது சூர்யாதான் என்று ரசிகர்கள் ஆருடம் சொல்லி வருகின்றனர். ஆனால் இப்போது வரை படத்தின் ஹீரோ யார் என்பதை தயாரிப்பு நிறுவனமோ இயக்குனரோ இன்னும் முடிவு செய்யவில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்