ஆறாவது நாளில் குறைந்த அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வசூல்!

vinoth

புதன், 16 ஏப்ரல் 2025 (09:05 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

வசூலில் பெரிய அளவில் சாதித்து வரும் இந்த படம் தமிழக அளவில் மட்டும் இன்று 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இந்த படம் விரைவில் 200 கோடி ரூபாய் வசூலை உலகளவில் எட்டும் என்றும் மேலும் 250 கோடி ரூபாய்க்கு மேலாக திரையரங்குகள் மூலமாக எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களை முன்னிட்டு நல்ல வசூல் இருந்த நிலையில் நேற்று ஆறாம் நாள்  வசூல் வீழ்ந்துள்ளது. நேற்று வேலைநாளில் இந்திய அளவில் 6 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்