சூரரை போற்று வெயிட்டான அப்டேட் கொடுத்த இரண்டு பிரபலங்கள்..!

Webdunia
சனி, 11 ஜூலை 2020 (23:37 IST)
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.

நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. spicejet boeing 737 ரக விமானத்தில் பறந்தபடியே வெய்யோன் சிலை பாடலை வெளியிட்டனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன் ட்விட்டரில் "ஜூலை 23-ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளன்று ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக" தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், “சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூரரைப்போற்று படக்குழுவில் இருந்து ஸ்பெஷல் அப்டேட் வர இருக்கிறது. வரும் நாட்களில் அது என்ன என்ற விவரம் தெரியும்” என்று கூறி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்