சூது கவ்வும் செகண்ட் பார்ட்டில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சத்யராஜ்?

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (16:04 IST)
சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. டார்க் காமெடி வகையில் சூதுகவ்வும் தமிழ் சினிமாவில் ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்பட்டது. அதற்கு முன்னர் இந்த ஜானரில் வந்தது கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இப்போது 10 வருடங்கள் கழித்து சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பாளர் சி வி குமார் திட்டமிட்டு வேலைகளை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் யங் மங் சங் படத்தின் இயக்குனர் அர்ஜுன் இந்த படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி நடித்த மையக் கதாபாத்திரத்தில் இரண்டாம் பாகத்தில் சத்யராஜை நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்