வீடியோ டைமிங் ஒரு நிமிடமாக மாற்றம்! – டிக்டாக் இடத்தை பிடிக்க இன்ஸ்டா முயற்சி!

புதன், 28 ஜூலை 2021 (16:53 IST)
இந்தியாவில் வீடியோ சார்ந்த சமூக வலைதளங்களுக்கு வரவேற்பு உள்ள நிலையில் இன்ஸ்டாகிராம் தனது செயலியில் மாற்றங்கள் செய்து வருகிறது.

இந்தியாவில் இணைய சேவை பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் வீடியோ சார்ந்த செயலிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. டிக்டாக் போன்ற வீடியோ ரீல் செயலிகள் தற்போது இல்லாத நிலையில் இன்ஸ்டாகிராமை வீடியோ ரீல் தளமாக மாற்ற இன்ஸ்டாகிராம் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

அந்த வகையில் இதுவரை இன்ஸ்டாகிராமில் 30 வினாடிகள் வரை மட்டுமே ரீல் செய்ய முடிந்த நிலையில் தற்போது இந்த அவகாசம் ஒரு நிமிடமாக மாற்றப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலர் தினமும் பல வீடியோ ரீல்கள் செய்து வரும் நிலையில் இந்த அப்டேட் இன்ஸ்டா பயனாளர்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்