அதிசயம் நடக்கும்னு கனவு காணாதீங்க! – பாலிவுட்டை தோலுரித்த சோனு சூட்!

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (12:57 IST)
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்திற்கு பிறகு பாலிவுட் சினிமா மீது குற்றச்சாட்டுகள் குவியும் நிலையில், பாலிவுட் நிதர்சனம் குறித்து நடிகர் சோனு சூட் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் இந்திய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது அவர் நடித்துள்ள தில் பேச்சாரா படம் ஆன்லைனில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. அதேசமயம் சுஷாந்த் இறக்க பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியலே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து வெளிப்படையாக பேசியுள்ள பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் ”பாலிவுட்டில் நடிக்க வரும் புதியவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். உங்கள் நரம்புகள் எஃகு போல வலுவாக இருந்தால் உள்ளே வாருங்கள். மற்றபடி அதிசயங்கள் நடக்கும் என கனவு காண வேண்டாம். கட்டான உடல் இருப்பதால் மட்டும் வாய்ப்பு கிடைத்து விடாது. அந்த வாய்ப்பை ஒரு முன்னாள் நடிகர் ஒரு போன் கால் போட்டு தனது மகனுக்கு வாங்கி கொடுத்துவிட முடியும். ஏனென்றால் இங்கு நட்சத்திரங்களின் வாரிசுகளுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்