திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

சனி, 2 ஆகஸ்ட் 2025 (11:29 IST)
ஜூலை நான்காம் தேதி வெளியான இயக்குனர் ராமின் பறந்து போ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பறந்து போ, இயக்குனர் ராமின் வழக்கமான சீரியஸ் படங்களில் இருந்து கொஞ்சம் விலகி, நகைச்சுவை அம்சம் நிரம்பிய படமாக உருவாகியுள்ளது. மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தற்காலப் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அழுத்தம் மற்றும் அதிலிருந்து வெளியேறுவது குறித்த படமாக உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வழக்கமாக ராம் படங்களுக்குக் கிடைக்கும் வசூலை விட இந்த படத்துக்கு பெரிய வசூல் கிடைத்தது.

இதையடுத்து படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்