மீண்டும் ரிலீஸ் ஆகும் எஸ் ஜே சூர்யாவின் குஷி திரைப்படம்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (10:18 IST)
எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் குஷி.

இந்த படத்தில் விஜய், ஜோதிகா, மும்தாஜ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் பூமிகா நடிப்பில் ரீமேக் செய்தார் எஸ் ஜே சூர்யா. அங்கும் குஷி என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

நடிகர் பவன் கல்யாணின் மார்க்கெட்டை உயர்த்திய இந்த படம் 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இப்போது 21 ஆண்டுகள் கழித்து ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடும் விதமாக ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்